- Wednesday
- August 19th, 2026
நாட்டின் வைத்தியர்களின் தரத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில் பின்வாங்க போவதில்லை என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்காக சர்வதேசத்தின் தலையீட்டை பெற்றுக்கொள்ள வைத்தியர்கள் சங்கத்தினர் தயாராகியுள்ளதாக, அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த, தெரிவித்துள்ளார். மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி, இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும்...
நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வட...
யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியுள்ளது. யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர். குறித்த நபர்களிடம் இருந்து...
நாட்டின் வடக்கு பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் எதிர்வரும் நாட்களில் குளிர் காலநிலை ஏற்படக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தென் மாகாணத்தில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும்...
பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது பற்றுச்சீட்டு வழங்காமல் பணம் அறவிடப்படுமாயின் , உடனடியாக அது தொடர்பில் அறிவிக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.இவ்வாறு பணம் அறவிடப்படுமாயின் அருகில் அமைந்திருக்கும் வலயக் கல்வி அலுவலகத்தில் அல்லது உள்ளூர் அலுவலகத்தில் அறிவிக்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பணம் அறவிடப்படுவதாக...
இன,மத,மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி நெறியின் 14வது தொகுதியினருக்கான பயிற்சி...
கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கு வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே விஜயம் செய்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகணசபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ரன், மார்க்கம்...
மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (சைட்டம்) வழங்கப்படுகின்ற பட்டம் சட்டரீதியானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுபெற்று வெளியேறும் மாணவர்கள் மருத்துவப் பேரவையில் தொழிற்துறையினராக பதிவுசெய்துகொள்வது அவசியமாகும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவப் பேரவைக்கு உத்தரவிட்டுள்ளது. மாலம்பே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற இரண்டு மருத்துவப்பீட மாணவர்கள் தாக்கல் செய்த...
யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும் தீயிட்டமை தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த கடையினூள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளை...
கடந்த வருடம் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடுகளில் சிறீலங்காவை உலக சுகாதார நிறுவனம் இணைத்துக்கொண்டது. இந்நிலையில் அழிப்பதற்கு மிகவும் கடினமானதும், மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகையொன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமன்னாரின் பேசாலைப் பகுதியில் உள்ள கிணறுகளிலிருந்து இந்த நுளம்புவகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்புத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமபால ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த...
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும்...
வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாகப் புதிய செயற்திட்டமொன்று, அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென, ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்றிட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற்...
இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’...
நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிதாக 180 பேரை நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 2ம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் கால எல்லை மேலும் 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. மேற்படி விசாரணை குழு தற்சமயம்...
யாழ்.அரசடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் நேற்று(திங்கட்கிழமை) இரவு நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன், கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும், கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தாக்குதல்...
இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம்...
பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளும் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஐவரும் அதிக வலுக்கொண்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குணசேகரலிங்கம் ராஜ்மதன்(அச்சுவேலி), கே.குலேந்திரன்(திருவையாறு-கிளிநொச்சி), எம்.தவேந்திரன்(கிளிநொச்சி), வி.விஜயகுமார்(மன்னார்), லூவிஸ்...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ...
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
