- Wednesday
- August 19th, 2026
வடக்கை போன்று தெற்கிலும் அன்றாடம் வாளால் வெட்டிக் கொல்லப்படும் சம்பவங்கள் பதிவாகின்றன எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடக்கில் நடைபெறும் விடயங்களை மாத்திரம் பொய்யாக ஊதி பெரிதாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து, அண்மையில் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஜெயரட்ணம் தனுசன் என்பவர்...
நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் டி.சிவலிங்கம்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுக்காமல் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா.சம்பந்தன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார். இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியன உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு கிழக்கு...
யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர். நேற்றய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்கு முன் 4...
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்...
எதிர்வரும் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையான சமாதான பாதை சைக்கிள் ஒட்டமும், வாகனபேரணியும் தென் இலங்கை சார்ந்த ஆர்.பீரிஸ் என்பவரினால் நேற்றுக் காலை 07.30 மணியளவில் பருத்தித்துறை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்ஸிம், கிறிஸ்தவ மக்களிடையே நல்லிணக்கம்,...
யாழில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து இறங்கியபோது, அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளனர். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான, யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோன் அபிசேன் (வயது...
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் நேற்று முன்தினம் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் குறிப்பாக நகரப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே...
வடமாகாணத்தில் மானாவாரி மற்றும் பெரிய, சிறிய குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையில், சுமார் 28 ஆயிரத்து 802.5 ஏக்கர் நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இரு மாவட்டங்களிலும் 21 ஆயிரத்து 170 ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நெற்செய்கை 100 வீதம் அழிவடைந்துள்ளது. மேற்கண்டவாறு வடமாகாண விவசாய அமைச்சு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமனின்ப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர்...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரில் ஐவருக்கு நேற்றையதினம் யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998ம் ஆண்டு நீதவான் நீதிமன்றம்...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை....
மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...
சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகங்களிலுள்ள 14 ஆயிரம் கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் குழு நேற்று (31) கூடியபோது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எடுக்க எதிர்வரும்...
யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள நோதன் பவர்...
ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச...
யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 512 பேருக்கு டெங்கு நோயின் தாக்கம் காணப்படுவதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரன் தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...
வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது....
Loading posts...
All posts loaded
No more posts
