யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 512 பேருக்கு டெங்கு!

யாழ். மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் 512 பேருக்கு டெங்கு நோயின் தாக்கம் காணப்படுவதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாரன் தெரிவித்தார்.

நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் ஜனவரி 27ம் நாள் வரை 560 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளதாக சந்தேகிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் 512 பேருக்கு டெங்கு பீடித்து இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றுள் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் 139 டெங்கு நோயாளிகளும், உடுவில் பிரதேச செயலகத்தில் 88 நோயாளிகளும், கோப்பாய் பிரதேச செயலகத்தில் 48 டெங்கு நோயாளிகளும், நல்லூர் பிரதேச செயலகத்தில் 54 நோயாளிகளும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 14 நோயாளிகளும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 27 நோயாளிகளும், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் 12 நோயாளிகளும், கரவெட்டிபிரதேச செயலகத்தில் 32 நோயாளிகளும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 79 நோயாளிகளும், சங்கானை பிரதேச செயலகத்தில் 45 நோயாளிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 47 நோயாளிகளும், ஊர்காவற்றுறை மற்றும் கரைநகரில் பிரதேச செயலகத்தில் 6 நோயாளிகளும், வேலணை பிரதேச செயலகத்தில் 15 டெங்கு நோயாளிகளும் காணப்படுகின்றனர்.

கடந்த காலங்களை விட இவ்வருடம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படலாம். கடந்த 2006ம் ஆண்டில் 33 டெங்கு நோயாளர்களும், 2007ம் ஆண்டில் 169 டெங்கு நோயாளர்களும், 2008ம் ஆண்டில் 58 நோயாளர்களும், 2009 ஆண்டில்422 நோயாளர்களும், 2010 ஆண்டில் 2980 நோயாளர்களும், 2011ம்ஆண்டில் 384 நோயாளர்களும், 2012ம் ஆண்டில் 895 நோயாளர்களும், 2013ம் ஆண்டில் 829 நோயாளர்களும் 2014ம் ஆண்டில் 1933 நோயாளர்களும் 2015ம் ஆண்டில் 2038 நோயாளர்களும், 2016ம் ஆண்டில் 2319 நோயாளர்களும், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 512 டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து டெங்கின் தாக்கத்தை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts