- Wednesday
- August 19th, 2026
குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல், குறைந்த விலையில் வைத்தியர்களை நியமித்து நோயாளிகளின் உயிரோடு விளையாட அமைச்சர் ராஜித முற்படுகிறார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சங்கத்தின் செயலாளர் நவீன்...
ஜனாதிபதியின் உத்தரவை மீறி காணிகளை விடுக்காது இழுத்தடிப்பு செய்யும் ராணுவத்தினரின் செயற்பாடு, ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் புதுக்குடியிருப்பு பிரசெயலக நுழைவாயிலை வழிமறித்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் ஐந்தாவது நாளாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்திகடந்த திங்கட்கிழமையிலிருந்து போராட்டத்தை பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்றயதினம் நடைபெறவிருந்த தொடர்விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன்,...
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது. உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு...
கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சா் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், கலந்துகொள்ள வந்த முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் பிரத்தியேக பாதுகாப்பு பொலிஸாரை விட, சுமார் 25க்கும் மேற்பட்ட துப்பாக்கியேந்திய பொலிஸார், ஆயுதமற்ற நிலையிலான 15க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும்...
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட்டிருந்த போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் ஜகதாளப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடபகுதி கடற்றொழிலாளர் குழுவொன்று 25ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. இந்தக் குழுவில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளதாக கடந்நொழில் மற்றும் கடல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 'குளத்துடன் கிராமம்' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்...
ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து 69வது சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாளை சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல்...
இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இ.போ.ச பேருந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வட மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்ப்பட்டுள்ளது.
நேற்றய தினம் காலை 9 மணி முதல் இந்த...
இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு...
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.வட்டுக்கோட்டை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன....
தேசத்திற்கான பெண்களின் உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், கையெழுத்து வேட்டையும் யாழில் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், ஜேர்மன் தூதரகமும், இணைந்து இன்று வியாழக்கிழமை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தினை மேற்கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க...
இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு, முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இது மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே, இந்தப் புதிய அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது என்று...
“மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அதனைக் கண்ட நான் ஓடினேன். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது, எனது நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்தவர்) சூழ்ந்து நின்றிருந்தவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் நினைவற்றுக் கிடந்தான்”...
சித்தன்கேணி பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் சென்ற குழுவினர் கடை உரிமையாளரை தாக்கி அச்சுறுத்தியதுடன் ஒரு தொகையான பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், சித்தன்கேணி டச்சு வீதியில் அமைந்துள்ள பலசரக்கு கடையொன்றினுள் நேற்று இரவு 7.45 மணியளவில் 4 பேரடங்கிய குழுவினர் வாள், பொல்லு, கத்திகளுடன் நுழைந்து உரிமையாளரை...
பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...
பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...
முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள், தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இரவு பகலாக இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தின் 2ஆவது நுழைவாயிலை மறித்து இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த...
Loading posts...
All posts loaded
No more posts
