- Wednesday
- August 19th, 2026
முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்ப்பாணத்தில் 69 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை வாத்தியங்களும் முழங்க, சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது....
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. நேற்று காலை (04) கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறித்த புறாக்கள் சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். சிறிய துண்டு ஒன்றில்...
சட்டவிரோத மதுபாவனை மற்றும் விற்பனை தொடர்பில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன்தெ ரிவித்தார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானை, மல்லாகம், பருத்தித்துறை, ஆகிய இடங்களில் உள்ள மதுவரித் திணைக்களத்தின் அலுவலகங்களில் கடந்த வருடத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாக...
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் - ஜனாதிபதி நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்...
மல்லாகத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட இருயுவதிகளின் வீட்டுக்கு யாழ் கட்டளை தலைமையகத்தையைச் சேர்ந்த பெண் இராணுவத்தினர் நல்லெண்ண விஐத்தை மேற்கொண்டனர். அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட இருயுவதிகளில் ஒருவரின் பிறநத் தின நிகழ்விலும் இவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பெண் இராணுவத்தினர் உதவிகளையும் வழங்கினர்.
இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது....
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதும், காணாமல்...
மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்...
உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. கோப்பாய்கப் பொஸிசார் நேற்று இந்த தகவலை வௌியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பொது செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.கே.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களது வாழ்வியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம்...
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்...
மன்னாரில் முருங்கன் செம்மண்தீவில் கூட்டுறவுத் திணைக்களத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரின் பணிமனை இயங்கவுள்ள இந்தக் கட்டிடம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (02.02.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூபா 15 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர்பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார். மன்னார் மாவட்டக் கூட்டுறவு உதவி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நபரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த வீ.விஜயன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் எதிராக, நுகர்வோர் அதிகார சபை ஊடாக, இன்றிலிருந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் படத்தினையும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 06 அம்ச கோரிக்கையும் இன்று யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எரியூட்டி தமது கவனயீர்ப்பினை வெளியீட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச பேருந்துகள்...
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு...
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை அடுத்து, நாட்டில் மேலும் பல வைத்திய கல்லூரிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகத்தின் இணைப்பாக களுத்துறை பிரதேசத்தில் கொழும்பு மற்றும் கண்டியின் பிரதான தரப்பின் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினை அடிப்படையாக கொண்டு, புதிய தனியார் வைத்திய...
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...
Loading posts...
All posts loaded
No more posts
