போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! : அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் படம் எரிப்பு

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவப் படத்தினையும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 06 அம்ச கோரிக்கையும் இன்று யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எரியூட்டி தமது கவனயீர்ப்பினை வெளியீட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச பேருந்துகள் மீது நடாத்தப்படும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனித்துவத்தை சிதைக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தில் தனியார் பேரூந்து நிலையம் அமைத்தல் போன்ற விடையங்களை முன்னிலைப்படுத்தி வடமாகாண தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடாத்தப்பட்டுவரும் நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக யாழ் மத்திய பேரூந்து நிலையத்திலும் கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இது தொடர்பாக இன்றைதினம் யாழ்ப்பாண கோண்டாவில் பேருந்து சாலை மற்றும் யாழ்ப்பாண பேருந்து சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் எதிர்ப்பு வசனங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்.

கோண்டாவில் சாலையில் இருந்து பலாலி வீதியுடாக ஸ்ரான்ஸில் வீதி, யாழ் நகர் மத்திய பகுதி, மற்றும் கைதடி ,யாழ் மாவட்ட செயலகம், மற்றும் ஆஸ்பத்திரி வீதியுடாக வந்து அங்கிருந்து வாகனத்தின் மூலமாக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று தமது எதிர்ப்பினை அவர்கள் வெளியிட்டனர்.

இதற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசியல் தலைமைத்துவ அமைச்சர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர்களின் அலுவலகத்திற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சென்றதுடன் அவர்கள் அறிக்கை ஒன்றையும் இது தொடர்பாக கையளித்தனர்.

Related Posts