- Wednesday
- August 19th, 2026
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி...
பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறீலங்கா அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகின்றது என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், மாநாட்டின் ஒருபக்க நிகழ்வாக சிறீலங்காப் பிரதமர் ரணில்...
சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்துடன் தொடர்புடைய சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் நடராஜா (வயது 79) என்ற நபர், வீதியில் நடந்துச் சென்ற போது, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. படுகாயங்களுக்கு உள்ளான அவர், யாழ். போதனா வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்....
கீரிமலை, நல்லிணக்கபுரம் பகுதியில் சனிக்கிழமை, காணாமல் போன கஜேந்திரகுமார் கஜீபன் (வயது 10) என்றச் சிறுவன், நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளான். நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டில் இருந்து அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற சிறுவன், காணாமல் போயுள்ளான். இந்நிலையில், பாழடைந்த தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...
இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவருக்கு இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த மருந்தை மாரடைப்பு ஏற்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டுமென, வைத்தியர்கள்...
பேஸ்புக்கில் பதிவுசெய்கின்ற விடயங்கள், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றமையால், அவ்வாறான விடயங்களைத் தவிர்க்குமாறு, பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புத் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டமொன்றை கொண்டுவருவதைவிட, சிறுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது என, குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேங்காய் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அரசாங்க...
தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேய்காயின் விலை அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையை குறைப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஊடாக விலையை...
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கல்வியியல் கல்லூரி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டரா தெரிவிக்கையில்: பஸ்துன்ரட்ட மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களின் கல்லூரிகளை தவிர நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஏழாம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது என்றார். கல்வியாண்டுக்கு நான்காயிரத்து 69...
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் 69 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுபானசாலைகளை மூடுவதற்கும், வேறு விதத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் அரசாங்கத்தின்...
யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...
கடந்த 4 ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இரு தரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டதையடுத்து குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) வட மாகாண...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, 'நகர்த்தல் பத்திரம்' தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (03) ஊர்காவற்துறை...
சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில், மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும். பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலைில் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போதெ...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னால், 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, நேற்போறு ராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட...
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார். கேப்பாபுலவு - புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மக்களின் பிரச்சினை தொடர்பில், விமானப்படையினரிம் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண...
கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார். 'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
