Ad Widget

தீர்வையற்ற வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஞானமுத்து சிறீநேசன், மாவை சேனாதிராசா, சிவமோகன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் தீர்வையற்ற லான்ட் குரூசர் வாகனங்களைக் கொள்வனவு செய்து இன்னொருவருக்கு விற்றுள்ளார்கள்.

மேலும், சிசிர ஜெயக்கொடி, முத்துக்குமாரண, சமல் ராஜபக்ச, புத்திக பத்திரண, ஜனக பண்டார தென்னக்கோன், வசந்த சேனநாயக்க, வசந்த அலுவிகார, கே.எஸ்.என்.பெரேரா, ரொமேஸ் பத்திரண, நிசாந்த முத்துஹெற்றிகம, சுஜீவ சேனசிங்க, காஞ்சன விஜேசேகர, மோகன் லால் கிரேரோ, பாலித தெவாரப்பெரும, எச்.எம்.என்.பி. டி சில்வா, இம்ரான் மஹ்ரூப், கே.ஏ.எஸ்.ஜெயரத்ன, திலும் அமுனுகம, லொகான் ரத்வத்தை, லக்ஸ்மன் கிரியெல்ல, உதய கம்மன்பில, வண.அத்துரலியே ரத்தன தேரர், பி.எச்.விஜேபால, எஸ்.பிரேமரத்ன, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, வடிவேல் சுரேஸ், டினுசன், ஜே.பி.ஆர்இகே.விஜேரத்ன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரிச்சலுகையின் கீழ் இறக்குமதி செய்த வாகனங்களை கைமாற்றம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பெரும்பாலும் லான்ட் குரூசர் வாகனங்களையே கொள்வனவு செய்துள்ளனர்.

லான்ட் குரூசர் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்பவர் சுங்கக் கட்டணமாக, சுமார் 35 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும். ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, 30 தொடக்கம், 44 மில்லியன் ரூபாவை சுங்க கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Related Posts