பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுதியளித்தவாறு வேதன உயர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடுதழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான சுற்றுநிரூபத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லையென கல்விசாரா ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத்...

இலங்கையில் ஆண்டுதோறும் 2000 புதிய தொழு நோயாளிகள்!

இலங்கையில் ஆண்டு தோறும் சுமார் 2000 தொழு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1850 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திலே ( 43 சத வீதம் ) கூடுதலான தொழு நோயாளர்கள் காணப்படுகின்றனர். அடுத்த படியாக தென் மாகாணத்தில்...
Ad Widget

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...

சுமந்திரன் விவகாரம்: நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைக்க நோர்வே மறுப்பு!

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள்...

விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலனை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேலனையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்...

யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிகப் பெரிய சந்தையான திருநெல்வேலிச் சந்தையில் வழமையாக தேங்காய் குவியலாகக் காணப்படும். ஆனால் நேற்று தேங்காயின்றி சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் வினவியபோது, கடந்த சில தினங்களாக சந்தைக்கு தேங்காய் வருவது சடுதியாகக் குறைந்துள்ளது. யாழ். குடாநாட்டில் அதிகமாகத் தேங்காய் விளையும் கொடிகாமம்,...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

எதிர்வரும் மாதம் 11, 12 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறையாற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் 4,000 ஆயிரம் பக்தர்கள்...

என்மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதால் கேப்பாபுலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லை!

என்னை அசிங்கப்படுத்தி, என்மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே தான் கேப்பாப்புலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தாம் கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ...

தென்னிலங்கை மீனவர்களால் காரைநகர் மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “காரைநகர் கடற்பரப்பில் கடந்த சில வாரங்களாக நீர்கொழும்பு, புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் பகுதியில் உள்ள கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்” என, அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்....

கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த விகாரை: பிள்ளையாா் கோவில் அமைக்க மறுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி,...

முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம்...

சயிடம் நிறைவேற்று அதிகாரியின் கார் மீது துப்பாக்கிச் சூடு

மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சயிடம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தால், சமீர சேனாரத்னவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது 58) , என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயில் வசிக்கும் குறித்த அதிபர் நேற்றைய தினம் விடுமுறை தினமாகையால் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச்...

கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை ஒரு எளிமையான மனிதனாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் ஜனாதிபதி மைத்திரி, தமது சொந்த ஊரான பொலனறுவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்து தாம் வாழ்ந்த இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். தமது கிராமத்து மக்களுடன் இன்முகத்துடன் சிரித்துப் பேசி நலம் விசாரித்த ஜனாதிபதி மைத்திரி, தாம் சிறுவயதில் வாழ்ந்த வீட்டிற்கும் சென்றுள்ளார். மற்றும் அங்குள்ள...

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக அண்மைய காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தால்,...

புதுக்குடியிருப்பில் வலுக்கிறது ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை

ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு...

யாழ்.பெரியபுலம் மகாவித்தியாலயத்திற்கு விசமிகள் தீ வைப்பு

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் சாரணர் கூடம் உள்ளிட்ட இரண்டு கூடங்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் கொக்குவில் பகுதியில் உள்ள பெரியபுலம் பாடசாலையின் சாரணர் கட்டிடத்தொகுதிக்கு இனம் தெரியாதோர் வைத்த தீயினால் சாரணர் கூடம் மற்றும் அருகிலிருந்த மாணவர்களிற்கான...

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற...

யாழ் ஊறணி கரையோரம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து தேசிய...

சம்பந்தனும், சுமந்திரனும் பேப்பட்டம் கட்ட முயற்சிக்கின்றனரா?; மக்கள் கடும் விசனம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும்...
Loading posts...

All posts loaded

No more posts