Ad Widget

காணிகளை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்: கேப்பாப்பிலவு மக்கள்

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான பதிலும் கிடைக்காத நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பின்னர் தமது போராட்டத்தின் வடிவம் மாற்றமடையும் என தெரிவித்துள்ளனர்.

இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த தாம் தற்கொலை செய்துகொண்டால்தான் காணிகளை விடுவிப்போம் என அரசாங்கம் கருதினால் அதனையும் செய்ய தயாரென அரசுக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவித்துக்கொள்வதாக இம் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளை பாடசாலைக்கும் அனுப்ப முடியாமல் வீதியில் இவ்வாறு போராட்டம் நடத்திவரும் தம் மீது எந்தவொரு அதிகாரியும் கருணை காட்டவில்லையென தெரிவிக்கும் மக்கள், விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாம் அமைந்துள்ள 84 குடும்பங்களுக்கும் சொந்தமான காணியை விடுவிக்காவிட்டால் தாம் காணிக்குள் செல்லமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts