யாழில் ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

சயிடத்தால் மருத்துவ பீட மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்படாது

சயிடம் நிறுவனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, சயிடம் நிறுவனத்தால் வைத்திய பீட மாணவர்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அக்கரபத்தணை - ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...
Ad Widget

குளிர் காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும்!

நாட்டில் மீண்டும் நிலவும் குளிர் காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்து நிலவக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.காற்று படிவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த குளிர் காலநிலைக்கு காரணமாகியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் எதிர்வரும் 13ம் திகதியின் பின்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அவர்...

பேச்சுவார்த்தை தோல்வி: விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து போராட்டம்

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து மக்கள் தமது போராட்டத்தை நடத்திவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துரைப்பற்று...

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவதாகவும், சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக...

யாழ் மாவட்டத்தில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் யாழ். மாவட்டத்தில் ஐனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பாடசாலைக்கு செல்லாத...

கர்ப்பிணி கொலை: இன்று அணிவகுப்பு

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று (08) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும்...

வித்யா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...

முதல்முறையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டத் தொகுதி ஏற்பு

இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சட்டத் தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு!

புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக முன்னெடுதிருந்த நிலையில் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று ஒன்பதாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்....

முகாம்களிலிருந்து வெளியேற மக்கள் முன்வரவில்லை என்கிறார் சுவாமிநாதன்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்பட்ட போதிலும், 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லையென்றும், முகாம் காணப்பட்ட இடத்தின் அருகிலேயே அவர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் நலன்புரி முகாம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...

போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாது

வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்...

புலனாய்வுப் பிரிவினராக நடித்த மூவர் கைது

கடந்த சில மாதங்களாக வவுனியாவில், புலனாய்வுப் பிரிவினர் என, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில், தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்....

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு!

தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் சில சிங்கள மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு தமது முழுமையான...

யாழில் ஊடகவியலாளர்களிற்கான புதிய அமைப்பு உருவாக்கம்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு நேற்றையதினம் யாழ். பொதுநூலகத்தில் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் மாவட்டத்தின் அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கான தேவை குறித்து கலந்துரையாடினர். இதன்படி சகல ஊடகவியலாளர்களின் நலன்சார்ந்து இயங்கும் ஊடகவியல் அமைப்பொன்று தேவை என்பது ஏகமனதாக கருதப்பட்டதன் காரணமாக அமைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைப்பிற்கான நிர்வாகசபை...

சயிடம் ஒருபோதும் மூடப்படாது! சயிடம் நிறுவனத்தின் தலைவர்

தான் இலாபம் உழைக்க நினைத்திருந்தால் வைத்திய நிறுவனத்தை அல்ல கெசினோ நிறுவனத்தையே ஆரம்பித்திருப்பேன் என, சயிடம் நிறுவனத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், சயிடம் நிறுவனத்தை ஒருபோதும் மூடும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, சயிடம்...

யாழில் ரணிலின் உருவபொம்மை எரிப்பு

மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு ஆகியன இணைந்து யாழ். நகரில் ​நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு!! ; பிள்ளைகள் எச்சரிக்கை!!

கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...

முன்னாள் போராளிகளுக்கு கால்களை வழங்கியது இராணுவம்

தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்து சிறப்புத் தேவையுடையவர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் கால்களை வழங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை ராணுவம் வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் இன்று (07) ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில்...

ஊறணி மக்களை ஏமாற்றிய இராணுவம்!

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊறணி பிரதேசத்தின் இறங்குதுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 மீற்றர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்த போதிலும் குறித்த நிலப்பகுதியை மக்களிடம் ஒப்படைக்காது 500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரமே இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துள்ளதாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய...
Loading posts...

All posts loaded

No more posts