கேப்பாப்பிலவு போராட்டம் : சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்!

சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்று (சனிக்கிழமை) 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் இம் மண்மீட்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது...

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேச வடக்கு முதலமைச்சர் தயார்!

வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது....
Ad Widget

யுவதி கர்ப்பம்: சிப்பாய் கைது

யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாய், இராணுவ அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. படைச் சிப்பாய் அங்குள்ள யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது...

வன்னியில் பன்றிக் காய்ச்சலால் மூவர் பாதிப்பு

வன்னியில் பன்றிக் காய்ச்சல், பீடிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா, மாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் சிறுவர்கள் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள்...

எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்காகவே எழுக தமிழ்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றி உரையின் முழு வடிவம்.. ´எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!´ என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும்...

மகிந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை மைத்திரி அரசாங்கம் சட்டத்தால் பறிக்கிறது

தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பறிப்பதில் மகிந்த ராஜபக்சா அவர்களின் தலைமையில் இருந்த கடந்த அரசாங்கத்துக்கும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை நடப்பு அரசாங்கம் சட்டத்தால் பறிக்க முயல்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இரணைமடு பாரிய...

ஒற்றையாட்சி ; தமிழர்களுக்கான சாவு மணி

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை...

கிழக்கு எழுக தமிழ் பேரணி; எழுச்சியுடன் ஆரம்பம்

கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். காலையில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை...

புலிகளின் விமான ஓடுபாதைக்கு பாதை அமைக்கவே மக்களின் காணிகள் அபகரிப்பு!

விடுதலைப்புலிகளின் ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதையொன்றை உருவாக்குவதற்காகவே தாம் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதாக விமானப்படையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 84ஆவது அமர்வு நேற்று நடைபெறுகையில், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றும் பிரேரணையை முன்மொழிந்தார். இதன்போது...

புதுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதாக ரணில் உறுதி!

அரச காணிகளை இராணுவத்தினரின் தேவைக்குப் பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் உறுதியளித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது விரைவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காப்...

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு!

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள்...

 சுமந்திரனின் பாதுகாப்பில் கவனஞ்செலுத்தவும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று (09) அறிவித்தார். நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்றுக்காலை 10:30 க்கு கூடியது. அதன் பின்னர் விடுத்த சபாநாயகர் அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்...

வாள் கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின் அதியுச்ச தண்டனையை வழங்கவேண்டும்

“தென்னிந்த திரைப்படங்களின் தூண்டுதலால், கத்தி மற்றும் வாள்களால் வெட்டிக்கொள்ளும் சம்பிரதாயம் யாழ்ப்பாணத்திலும் நடைமுறையில் உள்ளது. இந்த வாள் கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின், சட்டத்தின் ஊடாக ஆகக்கூடிய அதியுச்ச தண்டனையை வழங்கவேண்டும்” என்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்தச் சமூக விரோத செயற்பாடுகள், நீதிமன்றத் தண்டனைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே...

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் 15ம் திகதிக்கு பின் ஏற்கப்படமாட்டாது!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 15ம் திகதிக்கு பின்னர் முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்கப்பட மாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 23ம் திகதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை...

மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிக்க திட்டம்

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

 முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க...

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு

யாழில் வேலைவாய்ப்பு இன்றி உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே யாழ். மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் இவ்வாறு தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் பயிற்சி நெறிகளை முடித்த 182 மாணவர்களில் 160 பேர் யாழ். மாவட்டத்தில்...

யாழ்தேவியில் மோதுண்டு இராணுவச்சிப்பாய் பலி!

இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியில் மோதுண்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை அரியாலை இராணுவமுகாமுக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குறித்த இராணுவத்தினர் புகையிரதக் கடவையில் உள்ள சிக்னலைக் கவனிக்காது பாதையைக் கடக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் அதேNயிடத்தில் பலியாகியுள்ளதுடன், இன்னொரு இராணுவச் சிப்பாய்...

கேப்பாப்புலவு போராட்டத்தையடுத்து முல்லைத்தீவு மாவட்ட இராணுவமுகாம்கள் பலப்படுத்தல்!

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கமாறு கேப்பாப்புலவு மக்கள் இன்று பத்தாவது நாளாக போராட்டம் நடாத்திவரும் நிலையிலும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தமது காணிகளை மீட்பதற்காகவும் புதுக்குடியிருப்பில் இன்று ஆறாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த...

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பில் சிங்கள மக்கள் போராட்டம்!

கேப்பாப்புலவில் தமது காணிகளை மீட்கப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களால் நீர்கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஆக்கிரமித்துவைத்துள்ள தமது காணிகளை மீட்பதற்காக கடந்த பத்து நாட்களாக கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நீர்கொழும்பில் சிங்கள மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் தனியார் பஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதிகள், நடத்துனர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன பேரணி ஒன்றை இன்றைய தினம் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்தனர். இவ் கண்டன ஆர்ப்பாட்டமானது யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கைதடியில் உள்ள வடமாகாண சபைக்கு...
Loading posts...

All posts loaded

No more posts