- Wednesday
- August 19th, 2026
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். தூரப்பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய தம்மை இடமாற்றுமாறு கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனுடன்...
எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்கு மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பிறப்பித்தார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 14ஆவது நாளை எட்டியுள்ளது. மக்களது காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இம் மக்கள் ஆரம்பித்த போராட்டம், இரவு...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 இந்திய மீனவர்கள், தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக தாம் சிறைவைக்கப்பட்டுள்ளதால், குடும்பங்களை...
காணிப் பிரச்சினைகளில் தீர்வை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வடக்கு மாகாண சபையால் முடியாது என்றும் தீர்வை வழங்க வற்புறுத்தும் கடப்பாட்டையே ஆற்றும் வரையரை மாகாண சபைக்கு தற்போது உண்டென்றும் வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தில் நேற்று கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
இலங்கையர்களுக்கு வீசா இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்லாம் என வெளியான தகவல்களில் எந்தவித உண்மையில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் இலங்கை பிரஜைகள்...
கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து திடீரென கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஐந்துபேரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட ஐந்து முன்னாள் போராளிகளின் வழக்கு விசாரணைகளும் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது. 30 ஆம் திகதி...
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து,...
தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்தால் சிங்களவர்களை ஆட்சி செய்யமுடியாத நிலையை உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூளுரைத்துள்ளார். புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது 13ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்றதாக இருக்கக்கூடாது எனவும், அது சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்க...
பலாலி விமானநிலைய ஓடுபாதையை விரிவாக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் கையெழுத்திடப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 84ஆவது மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த அமர்வின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பலாலி விமானநிலையத்தை விரிவாக்குவதற்காக 1600 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று...
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும்...
கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரள கஞசா மீட்கப்பட்டுள்ளது, பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர்...
சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணித்த, பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இவ்வாாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் அவ்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் சந்தித்து மாலபே சைட்டம் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பு நிலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியது. இச் சந்திப்பு பற்றி அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உப செயலாளர்...
நாடு முழுவதும் இலவச WiFi வசதி வழங்குவதாகத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பலூன் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் உள்ளதா என ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. திட்டத்துடன் தொடர்புபட்டுள்ள ராமா என்ற நிறுவனம் குறித்து சிக்கல் காணப்படுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். முழு நாடும்...
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்தி வந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தினூடாக பிற மாவட்டமொன்றுக்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக இரகசிய தகவலொன்று கிடைக்கப்பட்டிருந்தது....
இலங்கையில் முதல் தடவையாக கலப்பு மின் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாணம் எழுவைதீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இந்த மின் திட்டத்தை நேற்று திறந்துவைத்தார். இந்தத் திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது....
தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கலந்துரையாடலில், வடமாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
