சிங்களவர்கள் ஆட்சிசெய்ய முடியாத நிலையை உருவாக்குவோம்: சுமந்திரன்

தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்தால் சிங்களவர்களை ஆட்சி செய்யமுடியாத நிலையை உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூளுரைத்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது 13ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்றதாக இருக்கக்கூடாது எனவும், அது சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், அவர்களைத் தமிழர்கள் ஆளமுடியாது செய்வார்கள் என முன்னாள் ஐநா பொதுச்செயலர் பான்கிமூன் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

நாங்கள் மீண்டும் வன்முறைக்கோ, ஆயுதம் ஏந்தவோ போவதில்லை. மாறாக தமிழ் மக்களை சிங்கள மக்கள் ஆளமுடியாத நிலையை உருவாக்குவோம் எனவும் சூளுரைத்துள்ளார்.

Related Posts