இலங்கையர்கள் வீசா இன்றி அமெரிக்கா செல்லாம் என்ற செய்தி பொய்யானது

இலங்கையர்களுக்கு வீசா இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்லாம் என வெளியான தகவல்களில் எந்தவித உண்மையில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக அதிகபட்சமாக 180 நாட்கள் இலங்கை பிரஜைகள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

180 நாட்களை விட அதிகமாக தங்கியிருக்க வேண்டுமாயின் வீசாவை பெற வேண்டும் என யு.எஸ்.ஏ ரெலிவிசன் இணைத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நிறைவேற்று உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சிரியா, ஈராக், ஈரான், சுடான், லிபியா, சோமாலியா மற்றும் யேமனுடன் இரட்டை பிராஜாவுரிமை உள்ளவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் .எஸ்.ஏ ரெலிவிசன் இணையத்தளம் கூறியிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் இருதரப்பு வீசா உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே வீசா இல்லாமல் இலங்கை பிரஜைகள் அமெரிக்கா செல்லலாம் என வெளியான தகவலில் உண்மையில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts