- Wednesday
- August 19th, 2026
தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் என்று, மொறட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலகத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் இடம்பெற்ற இவ்வாறான போராட்டம் பெரும் களேபரத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முற்றுகைப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் 07ஆம் திகதி இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் பாரிய ஆர்ப்பாட்டமான...
முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க...
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 550 பேரை ஒரே நாளில் கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் 550 பேர், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினரில் சுமார் 43000 பேர் தப்பிச் சென்றிருந்ததோடு, அவர்களுக்கான...
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்குள் மக்களின் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை...
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற் நேற்று மாலை ஊடகவியியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது கேப்பாபபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
தனக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது எனவும், மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை எனவும் , இந்த பாதுகாப்பை தான் விரும்பவில்லை எனவும் , ஆனாலும் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,...
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் சமூகத்துடன் இணைந்துள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினருக்கு இராணுவத்தின் மகளீர் படையனியால் கணிணி தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மயிலிட்டியில் அமைந்துள்ள 7வது மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கீதிகா ரங்கோட்டே இப்பொருட்களை வழங்கி வைத்தார். புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன்...
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கோரவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்கப்படுமாக இருந்தால் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை ஐ.நா. மேற்பார்வை செய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட...
பாதிக்கப்பட்டோரையும் சாட்சிகளையும் பாதுகாக்கவேண்டிய தேசிய பாதுகாப்பு அதிகார சபையில், ஐ.நா. அறிக்கையொன்றில் சித்திரவதை தொடர்பில் குற்றமிழைத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ள இருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது குற்றமிழைத்தோரை பாதுகாப்பதாக அமைந்துள்ளதென உண்மை மற்றும் நீதி பொறிமுறைக்கான சர்வதேச நீதித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றஞ்சாட்டியுள்ளார். ‘ஆடுகளின் காவலுக்கு ஓநாயை வைத்தல்’ எனும் தலைப்பில் குறித்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள...
கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது....
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அம்பகாமத்தை அண்டிய பகுதிகளில் நடமாடும் புலிகளினால் இதுவரை 14 மாடுகளை பிடித்துச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுடிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பகாம் மற்றும் மம்மில் பிரதேசங்களில் புலிகளினால்...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் விளக்கமறியல் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த...
யாழ். ஆரியகுளத்து நீர் சிவப்பு நிறமாக மாற்றமடைந்தமை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லை எனவும் அவ்வாறு முக்கிய பிரச்சினையாக இருந்தால் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆரியகுளம் நீர் சிவப்பாக மாறியமை தொடர்பாக எங்களுக்கு எந்தவிதமான...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு அடுத்ததாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளாதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் உயர் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தாவடி பகுதியிலேயே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து...
தமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், 'எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து...
கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின்...
தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு, உரிய தீர்வு வழங்க வேண்டும் என கோரி, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம்...
நாட்டில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும், கடற்கரையோர பிரதேசங்களில் 60 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடுமையான காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலையில் ஓரளவு மாற்றத்தை இன்று இரவிலிருந்து சில தினங்கள் எதிர்பார்க்கலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது....
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் 48 மணித்தியால சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின்போது, தாம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையென்றும் பிரதேச செயலாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
