வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற் நேற்று மாலை ஊடகவியியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன் போது கேப்பாபபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதமைச் சந்தித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்…
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். அவர் கூறும் பொய்கள் அனைவருக்கும். தெரியும்.காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அவர்கள் அரச தரப்பனரைச் சந்திப்பதாக தீர்மானிக்கப்பட்டு அவர்களும் சந்திப்பதற்கு கடந்த சில தினங்களிற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.
மக்கள் அரச தரப்பினரைச் சந்திப்பதற்குச் சென்ற போது அங்கு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர சுமந்திரன் உள்ளிட் ஏனைய சிலரும் நின்றிருந்தனர்.இதன் போது இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பினர் நின்றால் தாங்கள் பிரதமரைச் சந்திக் மாட்டோம் என்று காணாமற்போனோரின் உறவினர்கள் கூறினர்.
அதன் போது தாங்கள் எல்லா மக்களதும் பிரதிநிதிகள் என்றும் தாங்களும் சந்திப்பில் இருப்பதாக கூறினார். ஆயினும் மக்கள் கூட்டமைப்பினர் வெளியேறினாலே சந்திப்போம் என்று கூறினர். இதன் பின்னர் கூட்டமைப்பினர் இல்லாமல் மக்கள் பிரதமரைச் சந்தித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் வெளியே வந்த சுமந்திரன் நடந்த எல்லாவற்றையும் தலைகிழாக்கி தாங்கள் தான் சந்திப்பை புறக்கணித்துவிட்டு வெளியே வந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தாங்கள் எல்லா மக்களதும் பிரதிநிதிகள் என்றால் ஏன் கேப்பர்பிலவு மக்கள் மட்டும் பிரதமரைச் சந்திக்க வர வேண்டும். அவர்கள் சென்றிருந்தால் மட்டும் என்னதீர்வு கிடைத்திருக்கப் போகின்றது. இதுவரையில் தமிழ் மக்கள் சார்ந்த எத்தனை விடயங்களுக்கு அல்லது பிரச்சனைகளுக்கு பிரதமர் தீர்வைக் கொடுத்திருக்கிறார். சுமந்திரன் பாவம் எல்லா இடத்திலயும் மாறி மாறிப் பொய் சொல்லிச் சொல்லி தத்தளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 7 வருடமாக நாம் சொல்லிச் சொல்லி வருகின்ற விடயங்கள் எல்லாம் நடந்து வருகின்றது.சுமந்திரன் இன்னும் பாதுகாப்பைத் தேட வேண்டி வரும் என்றார்.