நாட்டில் கடும் காற்று வீசக்கூடும்!

நாட்டில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும், கடற்கரையோர பிரதேசங்களில் 60 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்திலும் கடுமையான காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலையில் ஓரளவு மாற்றத்தை இன்று இரவிலிருந்து சில தினங்கள் எதிர்பார்க்கலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மழை தூறல் காணப்படும் என்றும் ஏனைய இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts