சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது...

சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட...
Ad Widget

கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள்!

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு 337 விபத்துக்கள் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு குறித்த விபத்து இணைபிரிவின் அறிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்துக்களின் இறப்பு 22.2 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்...

கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

சட்டங்களை இயற்றுவதால் எவ்வித பயனும் இல்லை: வடக்கு முதல்வர்

சட்டங்களை இயற்றுவதாலும் செயற்திட்டங்களை மேற்கொள்வதாலும் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லையென்றும் அவை மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இன்று (புதன்கிழமை) காலை முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக...

வடக்கில் 3 சிறுவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்! மாகாணம் முழுவதும் அச்சுறுத்தல்!!

வன்னியில் 3 சிறார்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைத் தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இந்த நோய்த்தொற்று அச்சுறுத்தல் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.ஹதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிகையில்"2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல்...

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் திங்கட்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்

2016/2017ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதேவேளை உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத் திருத்தும் போது முன்பை விட சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் எந்த மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழு தயார் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான்...

அசிட் வீச்சில் மாணவி கொலை; சாட்சிகளிடம் விசாரணை

இளவாலைப் பகுதியில் மாணவி ஒருவர் மீது அசிட் வீசி அவரை கொலை செய்த வழக்கில் மாணவியின் தாயின் சாட்சியத்தை தொடர்ந்து மேலதிக சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளவதற்காக குறித்த வழக்கை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேற் குறித்த வழக்கு விசாரணைகள் 6 வருடங்களுக்கு பின்னர் நேற்று...

வடக்கு முதல்வரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

வடக்கிற்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுக்குழுவின் தூதுவர் டுங்–லாய் மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. வடக்கு முதல்வரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதிவரை வடக்கில் தங்கியிருக்கவுள்ள குறித்த...

டுபாயில் ஆறு இலங்கையர்களுக்கு சிறை!

டுபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும்...

தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் சிதறிக்கிடக்கும் மின்சார சிட்டைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...

வயிற்றில் பஞ்சுப் பொதியை வைத்து தைத்த டாக்டருக்கு எதிராக நஷ்டஈட்டு மனு

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக...

சிங்கள மக்களின் சந்தேகம் தீரும்வரை தீர்வு சாத்தியமற்றது!

வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடையமுடியாத காரியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட சந்தேகமே அதனை எட்டமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் தரப்பினர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை...

கர்ப்பினி பெண் படுகொலை: சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பினி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சிகளது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியப் பதிவுகளானது சாட்சிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நீதிவானது பிரத்தியேக அறையில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஏழு மாத கர்ப்பினி பெண்ணொருவர்...

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை

நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ நிராகரித்துள்ளார். சிறந்த மருத்துவக் கற்கைகளுக்காக தமது பல்கலைக்கழகத்தில் அதிகூடிய சம்பளத்திற்கு விரிவுரையாளர்கள்...

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்; சந்திரிகா

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது...

அவுஸ்திரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு திரும்பி வருமாறு பிரதமர் ரணில் அழைப்பு!

அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கான்பராவில் அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல்லைச் சந்தித்தபின்னர் அவருடன் நின்று இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது ‘அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக இலங்கை நாட்டவர்கள் சட்டத்தை...

காதலர் தினத்துக்கு அரசியல்வாதியொருவரால் கொள்வனவு செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு!

இலங்கை அரசியல்வாதியொருவர் காதலர் தினத்தை முன்னிட்டு 53கிலோ ரோஜாமலர்கள் 2000 ஏனைய மலர்களைக் கொள்வனவு செய்ததையடுத்து, இம்மலர்கள் அனைத்தும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டுள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இம்மலர்கள் பொதிகளில் அடைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தன. இவற்றை அரசியல்வாதியொருவரே கொள்வனவு செய்துள்ளார் என விமானநிலைய அதிகாரிகள் சந்தேகம்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமரின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ...
Loading posts...

All posts loaded

No more posts