- Wednesday
- August 19th, 2026
இளம் தாயின் சிறு தவறினால், 14 நாட்களேயான ஆண்சிசுவொன்று, பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (15) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், யாழ்ப்பாணம், நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த கபில்ராஜ் வயசன் என்ற 14 நாட்களேயான சிசு மரணமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிதாக திருமணம் முடித்த இளம் பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில்...
ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில்...
வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன்...
யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து...
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...
எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில், தெரிவான கிளிநொச்சி மாணவிகள் பங்களாதேஷ் பயணமாகினர். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த உலகக் கிண்ண ரோல் போல் போட்டியில்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என...
“தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் கட்சிகளும் இணைந்திருப்பதால், அரசியல் கட்சிகள் அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது” என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது, “பேரவையில் அங்கம்...
ஒரு பொருத்து வீட்டுக்கு, பலர் இரு தடவைகள் விண்ணப்பித்துள்ளனரென, அரச அதிகாரியொருவர் தெரிவித்தார். “கடந்த காலங்களில், வீட்டுத் திட்டங்களுக்குப் பயனாளிகள் தெரிவுசெய்யப்படும் போது, புள்ளிகள் வழங்கப்பட்டே தெரிவுகள் இடம்பெற்றன. பொருத்து வீட்டு விண்ணப்பத்தில் புள்ளிகள் வழங்கப்படும் முறை இல்லை. மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்ட போது, விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாகக் காணி உள்ளதா?...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத்...
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது செய்ததாக, இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனாநாயக்க தெரிவித்தார். இளவாலை பொலிஸ் புலனாய்வு அதிகரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாதகல் - கல்விளை பகுதியில், சிவில் உடையில் காத்திருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில்...
தென்தமிழீழ மண்ணில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை எமது அரசியல் வேணவாவை வெளிப்படுத்த இங்கு பல்லாயிரமாக திரண்டிருக்கும் எனது அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மக்களே! இங்கு வருகைதந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய மதப் பெரியார்களே! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் மாண்புமிகு விக்னேஸ்வரன் ஐயா...
போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்காக 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்ட மூலத்தின், மீளமைக்கப்பட்ட அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தயாரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 7 போக்குவரத்துக் குற்றச் செயல்களுக்காக இந்த தண்டப்பணம் அறவிடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டப் பணம் சீர்திருத்தம் செய்ய நியமிக்கப்பட்ட...
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவமும் பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு மேலாக விமானப் படையினரின் விமானமொன்று திடீரென வட்டமிட்டுச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள்...
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு, தடுத்து...
முல்லைத்தீவு - கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...
தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11...
கைலாசப்பிள்ளையார் கோயில் பகுதில் உள்ள கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர், வழமைபோன்று நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை, கடையினைத் திறந்து உள்ளே சென்றபோது,...
“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின்...
சய்டம் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு தான் பெற்ற கடன் மற்றும் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கான செலவுகள் உட்பட அனைத்தையும் வழங்க முடியுமானால் நிறுவனத்தின் உரிமையை முழுமையாக கையகப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக சய்டம் நிறுவனத்தின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாந்தோ கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
