- Wednesday
- August 19th, 2026
வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு...
சுவாசக் கோளாறு காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச நோய் காரணமாக பாதிக்கப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாச நோய்க் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த காலங்களில் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்க்...
கிளிநொச்சி மாவட்டம் ஜெயந்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன. மாணவியின் மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளது எனவும்...
பாகிஸ்தான் போர்ப்படைக் கல்லூரியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலையங்கத்தில் விரைவுரையொன்றை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பணம் மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடந்த புதன்கிழமை லாகூரிலுள்ள பாகிஸ்தான் போர்க் கல்லூரிக்குப் பயணம் செய்திருந்தார். பாகிஸ்தான் கடற்படை...
யாழ்.பல்கலைக்கழக தாவரவியல்துறையும் கொழும்பு பல்கலைக்கழக தாவரவியல்த்துறையும் இணைந்து ஆரம்பித்துள்ள மரநடுகைத்திட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (17), யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இயற்கையின் காலநிலை மாற்றம் வெகுவாக தற்போது மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அதனை சமப்படுத்தும் நோக்கிலும் இயற்கைக்கும் மாணவர்களுக்கம் இடையில் ஓர் உறவு முறையை பேணும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,000 மரக்கன்றுகள் யாழ் மாவட்டத்தில்...
நுகர்வோரை ஏமாற்றும் வகையில் காலாவதி திகதியை மாற்றி விற்பனை செய்த பிரபல நிறுவனத்தின் பொருட்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார். . யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் தேடுதல் நடத்திய வேளை மரக்கறி விதைகளை கொண்ட ரின்கள்...
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...
வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று(17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...
வலியடைப்பு சைவப் பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் காலை 7.00 மணிதொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை கல்லூரி வளாகத்திற்கு முன்னால் புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டதில்...
கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின்...
யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சனைகளுக்கு, ஒரு வாரகாலத்துக்குள் தீர்வு வழங்கப்படுமென யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். நாவற்குழி வீட்டுத் திட்டம் தொடர்பாக, மாவட்ட செயலரை கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாவற்குழிப் பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனொரு, அங்கமாக கடந்தமாத...
யாழ்ப்பாண மாவட்டத்தில், போசாக்கின்மை உள்ள பிரதேசங்களாக 5 பிரதேச செயலர் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மாவட்டம் முழுவதும் போசாக்கின்மையை ஒழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். போசாக்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலர் தலைமையில், வியாழக்கிழமை (16) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே, மாவட்டச் செயலர்...
இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...
கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு...
வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்....
ஆரம்பத்தில் இருந்த விமான நிலைய எல்லையை தாண்டி, அரசாங்கம் கூறுவதை போன்று ஒரு ஏக்கர் நிலத்தையேனும் மேலதிகமாக சுவீகரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பன்னிரன்டு பேரின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்...
நேற்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில், நேற்று பாடசாலை மாணவர்களும் இப்போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இருப்பினும் அண்மையில்...
சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு, இடைத்தங்கல் முகாம்களை மூடி, மக்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்புவதாக முன்னைய அரசாங்கம் ஐ.நா. மன்றத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக பாவனை...
வாள் கொண்டு ஒருவரை வெட்ட முற்பட்ட ஒருவருக்கு, மூவாயிரம் ரூபாய் அபராதமும் 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். கடந்த வருடம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தகராறு காரணமாக, ஒருவரை குறித்த நபர் வாளால் வெட்ட முற்பட்ட போது, பொலிஸார் கைது செய்திருந்தனர். கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
