- Wednesday
- August 19th, 2026
வவுனியா மாவட்டம் – கோதண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபு என்றழைக்கப்படும் இலங்கைநாதன் இளங்கோவன் (வயது – 31) என்ற குறித்த முன்னாள் போராளி, தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொலையா,...
நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிய மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெஞ்சுவலி; காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (16) அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர், தற்போது இருதய சத்திர...
கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால், வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (18) இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்றும் எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதிவரை மழை பெய்யாவிட்டால் நீர் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என, மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சன் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், மே மாத இறுதியாகும்போது, கடும் வரட்சி நிலை ஏற்பட்டால் குடி நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன. சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது....
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக...
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என கோரி, வடமாகாணம் முழுவதும் நாளை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாணவர்கள் பாடசாலை வாசலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்" என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட...
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனத உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும்...
மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 38 வகையான கண் வில்லைகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். கண் வில்லைகளின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதனால் கண் சத்திர சிகிச்சைக்கான விலைகளும் பெருமளவில் குறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது...
இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், உள்நாட்டு உற்பத்தி அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி ஒரு...
கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில் இருந்து நேற்று ஆரம்பமாகியுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம்...
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகள் தமது தலைமையை நிராகரித்து , ஆணித்தரமான முடிவை எடுத்து நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு மேலும் சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மின்சார சபைக்கு வழங்கும் உதவி என்னவென்றால், வழமையை விட ஒரு மின்விளக்கை அணைத்து வைப்பதாகும். டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாத மின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும், ஜனவரியை விட பெப்ருவரி மாதத்தின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக்...
வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது எனவும் நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிரைப் போல நீரைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான விசேட வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...
நல்லாட்சி அரசு தாமாகவே முன்வந்து செய்திருக்க வேண்டிய ஒரு பணியை கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் ஆயர் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சமுகத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...
Loading posts...
All posts loaded
No more posts
