வவுனியா மாவட்டம் – கோதண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபு என்றழைக்கப்படும் இலங்கைநாதன் இளங்கோவன் (வயது – 31) என்ற குறித்த முன்னாள் போராளி, தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என ஈச்சங்குளப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.