சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்” எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில் இருந்து நேற்று ஆரம்பமாகியுள்ளன.
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்” எனும் சிரமதான பயணம் நேற்று தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி வரை காலை 6.30 தொடக்கம் 12.30 வரை நடைபெறவுள்ளது.
இன்று 18 ம் திகதி சிரமதான பயணத்தின் நிகழ்வுகள் நான்கு இடங்களில் ஆரம்பமாகவுள்ளன.
நாச்சிமார் கோவிலில் இருந்து கே.கே.எஸ் வீதியூடாகவும், கோம்பயன்மணல் மயானத்தில் இருந்து மானிப்பாய் வீதியூடாகவும், நல்லூரில் இருந்து பருத்தித்துறை வீதியூடாகவும், யாழ்ப்பாண பல்கலையில் இருந்து பலாலி வீதியூடாக நான்கு இடங்களில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை முன்றலை வந்தடையவுள்ளது.
இந்த சிரமதான பயணத்தின் போது வீதியின் இரு மடங்கிலும் உள்ள பொலித்தீன்கள் துப்பரவு செய்யப்படவுள்ளன.
மேலும் 10,000 கடைகளுக்கு பொலித்தீன் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்படவுள்ளது.
இன்று போதனா வைத்தியசாலை முன்றலில் நடைபெறவுள்ள ஒன்று கூடலிற்கு யாழ்ப்பா மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார், மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே பொதுமக்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
