- Wednesday
- August 19th, 2026
டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், நேற்று (20) உத்தரவிட்டார். தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....
கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த இராணுவத்தினர், தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில்...
யாழ். நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றது. நேற்று மாலை யாழ். கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு...
யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. 2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர்...
தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...
அவுஸ்திரேலியாவுடன் ரி.20 தொடரை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இலங்கைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தொடரில் சிறந்து விளங்கிய அசேல குணரத்னவுக்கும் ஜனாதிபதி தனது விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்தக் கோரியும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாதெனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின்...
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் ஊவா மாகாணத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என...
கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க கோரி வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை பாடசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கொடு, அரசே எங்களின் நிலத்தை எங்களுக்கு விட்டு விடு, அரசே நில ஆக்கிரமிப்பின் மூலம் மாணவாகளின் கல்வியை பாழாக்காதே, காணிக்காக போராடும் மக்ளுக்கு தீர்வை வழங்கு, எதிர்க்கட்சித்தலைவர் 2016 ஏமாற்றப்பட்ட...
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...
வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய றோலர் படகுகள், கட்டைக்காடு, ஆழியவளை பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கத்தினரால், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்பரப்பில் போடப்பட்டிருந்த வலைகளே இவ்வாறு அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளதாக கட்டடைக்காடு மீனவ சங்க தலைவர் தெரிவித்தார். வலைகள் அறுத்தெடுத்துச்...
யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர். வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி...
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார். பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு அவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். ஐ.அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்துக்குப் பயிற்சிக்காகச் சென்ற அவர், அங்கு தங்கியிருந்த ஹொட்டலிலேயே, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இயந்திரப் பராமரிப்பாளரான குறித்த பெண், குறித்த...
2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2016/2017 பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவு பெறுகின்றது. 2016/2017 பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்காக இணையத்தளம் ஊடாக மாணவர்கள் தற்போது தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துவருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார். இதேவேளை,...
பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 01.00 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை - கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு,...
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என தெரியவந்துள்ளது. யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், சஞ்சீவ் தன் ‘‘Drone Camera’’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ என்ற தலைப்பில் யாழ். மண்ணின் அழகைப் படம்பிடித்து...
யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர், பல்கலைக்கு வெளியில் தங்கி தமது கல்வியை...
Loading posts...
All posts loaded
No more posts
