Ad Widget

வீதிகளில் சிதறிக்கிடக்கும் மின்சார சிட்டைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன.

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த வருடம் நவம்பா் மாத்திற்குரியதும், கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம், முரசுமோட்டை,ஊரியான், புன்ணைநீராவி, மயில்வானகபுரம், போன்ற கிராமங்களுக்குரிய மின் கட்டண சிட்டைகளே இவ்வாறு வீதியில் எறிப்பட்டுள்ளது.

மின்சார சபையின் உத்தியோகபூர்வ பாவனையாளார்களுக்கு வழங்கப்படுகின்ற மின்சார சிட்டைகளை எவ்வாறு அலுவலகத்திற்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்டு வீதியில் எறிந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதேவேளை இந்தப் பிரதேச மக்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு கடந்த வருடம் நவம்பர் மாத மின் கட்டண சிட்டைகள் கிடைத்துள்ளதா என வினவிய போது இதுவரை தங்களுக்கு மின் கட்டண பில் கிடைக்கவில்லை என பதிலளித்துள்ளனா். அத்தோடு தங்களுக்கு பல மாதங்களுக்குரிய மின்சார கொடுப்பனவுகளை ஒரு சிட்டையில் சேர்த்து வழங்குவதும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய மின்சார சபை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவிய போது இது விடயத்தில் என்ன நடந்தது? எவ்வாறு வீதிக்கு தங்களின் உத்தியோகபூர்வ சிட்டைகள் சென்றது? என்பது தொடர்பில் ஆராயந்து சொல்வதாக பதிலளித்தனா்.

Related Posts