Ad Widget

யாழில் தனியார் பஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதிகள், நடத்துனர்கள், பணியாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன பேரணி ஒன்றை இன்றைய தினம் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்தனர்.

இவ் கண்டன ஆர்ப்பாட்டமானது யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கைதடியில் உள்ள வடமாகாண சபைக்கு முன்பாக சென்றடைந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரனின் உருவப்பொம்மையை எரித்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை நடாத்தி இருந்தனர்.

இதற்கு எதிராகவெ இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசே சட்டம் தனியார் பேருந்துகளுக்கு மட்டுமா? இலங்கை போக்குவரத்து சபையை நிர்வகிப்பது தொழிற்சங்கமா? பாதுகாப்பான போக்குவரத்தை நிராகரிக்கும் இலங்கை போக்குவரத்து சபையை கண்டிக்கின்றோம் என்ற வாசகங்களுடைய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.

வாயில் கறுப்பு துணியால் கட்டி எதிர்ப்பை வெளியீட்ட அவர்கள் வடமாகாண முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

Related Posts