Ad Widget

மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிக்க திட்டம்

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.



மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,



முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும். இரகசியமாக காணி அபகரிப்பது சம்பந்தமாக பேசுவதற்கு, பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து மாவட்ட செயலகத்

தில் சந்திப்பை நடத்தவிருந்தார்.

இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சந்திப்பு பலாலிக்குள் மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரவித்த முதலமைச்சர்,

 சீ.வி.விக்னேஸ்வரன், படையினருக்கு காணி வழங்குவது தொடர்பாக என்னிடம் கோரிக்கை வருகிற போது அதனை நான் நிராகரித்திருக்கிறேன். இப்போது கொழும்பில் இருந்து மாற்று வழியாக மேற்

கொள்ளப்படுகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பாக ஆராய்வோம் என்றார்.

Related Posts