Ad Widget

இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

கடந்த 4 ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இரு தரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டதையடுத்து குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜயதிலக, மயூரன் உட்பட அரசாங்க அதிபர் பொலிஸ் தரப்பினர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும்; தனியார் போக்குவரத்து துறையை சேர்ந்த வட மாகா பொறுப்பானவர்கள் அதனுயை தொழிற்சங்கங்கள் என அனைத்தும் சேர்ந்து பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் டெனிஸ்வரன் தலைமையில் அவருக்கு கீழ் உள்ள தலைவர் நிக்கிலஸ்பிள்ளை அவருடன் சேர்ந்து வட மாகாண போக்குவரத்து சபையின் சி.ஆர்.எம். நிறைவேற்றுப்பணிப்பாளர், வட மாகாண தனியார் பேரூந்து சபையின் தலைவர் செயலளார் உட்பட நான்கு உத்தியோகத்தர் வீதம் இணைந்து மிக விரைவில் இணைந்த நேர அட்டவனையினை தயாரிப்பதாகவும் அதனை மிக விரைவில் அமைச்சரிடம் கையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மாவட்டத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கான பேரூந்து நிலையமாக செயற்படுமெனவும் அது வரை இரு தரப்பினரும் புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்களோ அது போல் முரணபாடுகள் இன்றி செயற்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட உள்ளுர் சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படும் வகையில் இணைந்த நேர அட்டவனை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே இதற்கு இரண்டு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். இதனை வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts