Ad Widget

முன்னாள் போராளிகள் அச்சமடைய தேவையில்லை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பொது செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய என்.கே.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களது வாழ்வியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கி தருவேன்.

ஊடகவியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சிலர் படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பு பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..

குறித்த செய்திகளால் தமது எதிர்காலம் குறித்து அச்சமடைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வரும் முன்னாள் புலி போராளிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு தங்களை இதிலிருந்து பாதுகாக்குமாறும் தங்களை சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் வாழமுடியாத நிலைமையை சிலர் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவுமாறும் அதற்கான வழிகளை தங்களுக்கு காட்டுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்தவகையில் அவர்களது கருத்தக்களை நான் செவிமடுத்ததுடன் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் இது தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றேன்.

உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது போல இந்த செய்தி உண்மையா அல்லது பொய்யானதா என்பது விசாரணைகள் மூலம் தெரியவரும்.

அந்தவகையில் முன்னாள் பேராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை இந்த புதிய அரசை பொறுத்தவகையில் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகின்றேன்.

அத்துடன் ஒரு உத்தரவாதத்தையும் அரசு சார்பாக நான் தராவிட்டாலும் அரசு மீது எனக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நான் கொண்டிருக்கும் நட்புறவுகள், காரணமாக இந்த விடயம் தொடர்பாக நீங்கள் எவ்விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

அத்துடன் உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களுக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலத்தையும் நான் நிச்சயம் உருவாக்கி தருவேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Posts