தேசத்திற்கான பெண்களின் உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், கையெழுத்து வேட்டையும் யாழில் இடம்பெற்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், ஜேர்மன் தூதரகமும், இணைந்து இன்று வியாழக்கிழமை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தினை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையினால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.
அந்த துண்டுப்பிரசுரத்தில் இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த இணையுமாறும், 2016 இல 1 மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்த சட்டத்தினை தொடர்ந்து பெண்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் உரிமைகளை செயற்படுத்துவோம் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
