Ad Widget

12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க!! ; சம்பிக்க ரணவக்க

ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

போர்க் குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டைக் கோருவதானது, தமிழீழத்தை மறைமுகமாகக் கோருவதற்கு சமனாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை வரவழைத்து, சர்வதேச விசாரணைகளின் மூலமாக தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதது தொடர்பில் ஆராய வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கும் நிலையில் இதுகுறித்து ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவம் யுத்தவிதிமுறைகளை மீறி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், அதேபோல யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்து முன்னாள் போராளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாலோ அல்லது உள்ளக விசாரணைகளை மேற்கொண்டாலோ இருதரப்பின் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்களும் அன்று ஆயுதம் ஏந்தி எமக்கு எதிராக போராடியவர்களே என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

எனவே வெறும் அரசியலுக்கான வார்த்தைகளை வெளியிட்டு மக்களைக் குழப்புவதை தமிழர் தரப்பு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts