Ad Widget

வடமாகாண அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவின் காலம் நீடிப்பு

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் கால எல்லை மேலும் 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.



வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

மேற்படி விசாரணை குழு தற்சமயம் விசாரணைகளை நடத்திவருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 83ம் அமர்வில் முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் மேற்படி விசாரணை குழுவின் கால எல்லையை மேலும் 2 மாதங்கள் அதிகரிக்கும்படி கேட்டிருந்தார்.



இதனையடுத்து 2 மாதகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை மாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கருத்து தெரிவிக்கையில், கால நீடிப்பு எதற்காக வழங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால் கால அவகாசத்தை கேட்டால் அதனை நாம் வழங்க வேண்டும். இல்லையேல் கால அவகாசம் போதாமையினால் சில விடயங்களை ஆராயாமல் விடும் சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே கால அவகாசத்தை வழங்க வேண்டும் என அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கூறினார். இதனை தொடர்ந்து பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts