தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேவஸ்தானம் ‘இறைபணிச் செம்மல்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஆலயத்தின் பாலஸ்தான மண்டபம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் பாலஸ்தான மண்டபத்தைத் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு ‘இறைபணிச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
ஆலயத்தின் ஆதீன குருமுதல்வர் சோ. இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கமும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
