வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து புனர்வாழ்வு பெற்று ஒரு வருடத்தினை பூர்த்திசெய்த மூவர் நேற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு), குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகிய மூவருமே சமூகத்துடன் இணைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய அதிகாரி, புனர்வாழ்வு நிலைய இணைப்பதிகாரி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமயத் தலைவர்கள், புனர்வாழ்வு பெறுபவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், நேற்றய நிகழ்வில் இப்புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுச்சென்ற பத்துப்பேருக்கு தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Related Posts