உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு பெருகி வருவதாக அறியமுடிகின்றது.

வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும்  இன்று உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக அறவழிப் போராட்டமொன்றும் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கு ஆதரவாக மதத்தலைவர்கள் , பிரதேசவாசிகள் , அரசியல் பிரமுகர்கள் என பலரினதும் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Related Posts