கொடிகாமம், கச்சாய் பகுதியில் உள்ள வீட்டில் திங்கட்கிழமை இரவு 18 பவுண் நகை, திருட்டு போயுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் வெளியிடத்துக்குச் சென்ற நிலையில், தனிமையில் இருந்த பெண், இரவு உறங்குவதற்காக அயல்வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் புகுந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர்.
காலையில், வீட்டுக்குச் சென்ற பெண், நகைகள் திருட்டு போனதைத் கண்டு, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.