வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட தளத்திற்கு வருகை தந்த பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் தகவல்களை சேகரித்துள்ளனர்.
நேற்றய தினம் இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்ட நிலையில், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.
இந்தநிலையில், நேற்று மாலை (24) போராட்ட தளத்திற்கு சென்ற பொலிஸார் படிவமொன்றில் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை திரட்டினர்.