Ad Widget

விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை

விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது.

அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்புரைக்கமைய, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சை மூலம் பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தொடர்ச்சியான ஆசிரிய பயிற்சி மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துவது அமைச்சின் நோக்கமாகும். இதற்காக மாகாண சபைகளுடன் இணைந்து முறையாக வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் நேர்முகப் பரீட்சை

இதேவேளை, மேல் மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இடம்பெறுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் புள்ளி மட்டத்திற்கு அமைய ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

Related Posts