Ad Widget

கடும் வறட்சிக்குப் பின்னர் குளிர்ந்தது நிலம்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வறட்சியால் நிலம் காய்ந்து பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் விளைச்சலை இழந்ததோடு பல பிரதேசங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது மக்களை ஆறுதலடைய வைத்துள்ளது. அத்தோடு, நீடித்த வெப்ப காலநிலையும் சீராகியுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு சில விவசாய கிராமங்களிலேயே மழை பெய்துள்ளதாகவும் அதிகளவாக விவசாயம் செய்யப்பட்ட பகுதிகளில் மழை பெய்யவில்லையென்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து தமது பிரதேங்களுக்கும் மழை பெய்யாவிட்டால் தமது பயிர்கள் யாவும் காய்ந்து விடுமென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும், நாட்டின் பல பாகங்களில் இன்று முதல் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவாக மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts