Ad Widget

திருகோணமலை துறைமுகம் தொடர்பில் இந்தியாவுடன் பேசியுள்ளோம்

வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.வி. இற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது திருகோணமலையின் திட்டமிடல் நடவடிக்கைகள் சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படுவதாகவும், அது நிறைவடைந்தவுடன் அந்தப் பிரதேசம் பாரிய சுற்றுலா வலயமாக மாறும் என்றும், அதன்பின்னர் ஜப்பான் முதலீடு செய்யும் என்றும் பிரதமர் இந்த உரையாடலின் போது கூறியுள்ளார்.

வடமாகாணத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளார்.

இது தவிர இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எட்கா உடன்படிக்கைக்கு இந்த ஆண்டின் நடுப்பகுதியளவில் ஒப்பமிடுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான தேவைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை கட்டியெழுப்பும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், சீனா, ஜப்பான், பங்களாதேஷுடனும் உடன்படிக்கைகளை செய்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்.டி.டீ.வி. இற்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்.

Related Posts