யாழ். மாவட்ட பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கி வந்த திக்கம் வடிசாலை வடக்கு மாகாண சபையின் ஆளுகையின் கீழ் கொண்டு வர இணக்கம் காணப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு தொடக்கம் திக்கம் வடிசாலையில் பணியாற்றிய ஊழியர்கள் 23 பேருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவரினால் முன்வைக்கப்ப ட்ட விவாதத்தை அடுத்து, குறித்த வடிசாலை வடக்கு மாகாண சபையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதற்காக வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தமது இணக்கத்தை தெரிவித்திருந்தனர்.
அதன்படி குறித்த வடிசாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நன்மை கருதி இதற்கான இணக்கத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் முன்வைக்கப்பட்டு, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.