ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கிளிநொச்சியில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந் பெருமளவான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழக மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“மோடி அரசே, மோடி அரசே ஜல்லிக்கட்டை நடத்த விடு – இல்லையே தமிழகத்தை பிரித்து விடு; வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்; அன்னிய முதலீட்டு peta வை விரட்டுவோம், தமிழகத்திற்காக ஈழம், ஈழத்திற்காக தமிழகம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.