மல்லாகத்தில் ரயிலுக்கு கல்வீச்சு!! ஓட்டுநர் வைத்தியசாலையில்

மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Related Posts