Ad Widget

யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்கள் ஒரு வாரகால உண்ணாவிரத போராட்டம்!

இலங்கையில் அமைக்கப்படவுள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மருத்துவ கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



இதன்படி, யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 36 ஆவது அணி மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரகால உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் போராட்டம் தொடர்பாக அதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தெரிவிக்கையில்,
 
தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டமிற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அடிப்படை கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து நாடு பூராகவும் உள்ள அரச மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

அதனடிப்படையில் வடமாகாணத்தில் உள்ள ஒரேயொரு மருத்துவ கல்லூரியாகிய யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீடத்தின் மாணவர்களான நாம் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.



இவ்வாறு எமது போராட்டத்துடன் இந்த தனியார் மருத்துவ கல்லூரியினால் நாட்டின் சாதாரண மக்களுக்கும் சுகாதார துறைக்கும் ஏற்படப் போகும் பாதிப்பு தொடர்பாக மக்களுக்கும் ஏனைய தொழிநுட்ப கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் எமது போராட்டத்திற்கு ஆதரவழிக்கும் மனோநிலையை ஏற்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.



இந்தநிலையில் தனியார் மருத்துவ கல்லூரியான ´சைட்டம்´மை அரசாங்கம் அரச உடமையாக மாற்றி அதனூடாக இலவசமாக அதிகளவான மருத்துவ மாணவர்களை உருவாக்க வேண்டும்.

அத்துடன் இலங்கை மருத்துவ அமைப்பை இழிவுபடுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் குறித்த தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியதுடன் இதற்கான அழுத்தத்தை அரசாங்கம் கொடுக்க வேண்டும்.

எமது கோரிக்கைகளை அரசாங்கம் சாதகமான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தி்ல் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

Related Posts