Ad Widget

தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை மாற்ற கொக்கக்கோலா நிறுவனம் விருப்பம்!

தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற அமெரிக்காவின் மென்பான உற்பத்தி நிறுவனமான கொக்கக்கோலா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கொக்கக்கோலா நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர் ஜோன் முர்பி, இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்து குறித்த விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக்கொண்டுள்ள கொக்கக்கோலா நிறுவனம், சிறீலங்காவில் உற்பத்தி மையத்தை ஆரம்பிப்பதற்கும், இங்கிருந்து இந்தியாவுக்கு அதனை ஏற்றுமதி செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் பல்வேறு மென்பானங்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சந்தைப்படுத்தி வருகிறது.

முதலீட்டுக்கான வரிவிதிப்பின் உறுதித்தன்மை தொடர்பாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கொக்கக்கோலா நிறுவனத்தின் உதவித் தலைவர் கவலையை வெளியிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் ஒரேயொரு நிறுவனம் மாத்திரமே பழச்சாறுகளை அடைத்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

அத்துடன், இந்தியாவில் கொக்கக்கோலா போன்ற நிறுவனங்கள், இந்தியாவின் குடிநீர் கேந்திர நிலையங்களைச் சுரண்டிவருவதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த நிலையிலேயே இந்த நிறுவனம் சிறீலங்காவை தனது உற்பத்திப்பொருளின் கேந்திரநிலையமாக மாற்ற முயற்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts