Ad Widget

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூறல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு அருகில் நேற்று காலை ஒன்பது மணியளவில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருடைய ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இகழ்வில், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தத்தால் எழுதப்பட்ட தமிழாராய்ச்சி படுகொலைகள் எனும் நூலை சிவாஜிலிங்கம் வெளியிட்டு வைக்க பதில் முதலமைச்சர் ஐங்கரநேசன் பெற்றுக்கொண்டார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது இலங்கை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 9 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts