Ad Widget

2019ம் ஆண்டிற்குள் முழுமையாக சகல நிறுவனங்களையும் சூரிய சக்தியால் வலுவூட்டல்

2019ம் ஆண்டுக்குள் சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தியின் மூலம் வலுவூட்டும் தேசிய திட்டத்தின் முதல் கட்டத்தை நிதியமைச்சர் நேற்று நிதியமைச்சில் தொடக்கி வைத்தபோது இவ்வாறு கூறினார்.

இரண்டு வருடங்களுக்குள் சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தி வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மின்வலு தோற்றுவாய்களுக்கு நிலைமாறும் துரித அபிவிருத்திப் பயணத்தில் இது முக்கியமான மைல்கல் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

புதிய மின்வலு உற்பத்தி தொகுதியின் மூலம் நிதியமைச்சின் மாதாந்த மின்சாரக் கட்டணம் இரண்டு இலட்சம் ரூபாவால் குறையக்கூடுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன உரையாற்றுகையில்,

இரு பாரிய நெருக்கடிகள் பற்றிய அச்சம் காரணமாகவே முன்னைய ஆட்சியாளர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்தியிருந்தார்கள் என்றார். சர்வதேச சமூகம் இலங்கையின் மீது முன்வைத்த குற்றச்சாhட்டுக்கள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு அவர்கள் அஞ்சியதாக அமைச்சர் கூறினார்.

நல்லாட்சி அரசின் கீழ் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதால் சர்வதேச அழுத்தம் குறைந்தது. எனினும், பொருளாதார சவால்கள் எஞ்சியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts