Ad Widget

தேர்தலை பிற்போடுவது சர்வஜன வாக்குரிமைக்கு விரோதமானது

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணையகம் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தலை நடத்தும் அதிகாரம் தமக்கு வழங்கப்படவில்லையென்றும் அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சரே தீர்மானிக்க எடுக்கவேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்தவேண்டும் என்பதே தமது அவா என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related Posts