Ad Widget

பற்றுச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு அபராதம் அதிகரிப்பு

பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனியார் பஸ்களில் தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அபராதத் தொகையொன்றை விதிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறு, பற்றுச்சீட்டின்றிப் பயணிக்கும் பயணியொருவருக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் பற்றுச்சீட்டுக் கட்டணத்தின் இருமடங்கையும் செலுத்தக்கூடிய வகையில், இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு தெரிவித்தது.

அதற்கு ஏற்றவகையிலான சட்டத்திருத்தங்களை, தற்போது தயாரித்து வருவதாக, மேற்படி ஆணைக்குழுவின் ​தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

இதேவேளை, பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்காத பஸ் நடத்துனர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts